யாழ். நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை மூன்று பெண்கள் உட்பட ஐவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.










