யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் 115 மாணவிகள் 9 A சித்தி!

2ஆம் இணைப்பு

2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் 115 மாணவிகள் 9 A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

59 மாணவர்கள் 8 A பெறுபேறுகளையும், 22 மாணவர்கள் 7 A பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.

………

2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் 110 மாணவிகள் 9 A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

” வெளியான G.C.E (O/L) 2022(2023) பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் தற்போது கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின்படி ஏறத்தாழ 110 மாணவர்கள் 9A பெறுபேற்றினை பெற்றுள்ளார்கள். உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதும் சரியான தகவல் விரைவில் அறியத்தரப்படும்.” – என்று பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 110 மாணவிகள் 9 A என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles