யுவதியை மோதிவிட்டு சினிமா பாணியில் தப்பிச்சென்ற சாரதி – வாய்க்காலுக்குள் விழுந்தது ஆட்டோ (படங்கள்)

கிளிநொச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஆட்டோ வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு அதன் சாரதி தப்பி ஓடிவிட்டார்.

இவ்விபத்து இன்று (25) நண்பகல் கிளி நொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி குளத்திற்கு அருகில் ஐந்தடிவான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டியில்சென்றவர் மோதியுள்ளார்.

இதன் போது யுவதி வீதியில் வீழ்ந்து கிடக்க அதனை பொருட்படுத்தாத முச்சக்கர வண்டி சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன் போது வீதியில் பயணித்தவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியை பிடிப்பதற்கு துரத்திய போது வேகமாக சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது. இருப்பினும் சாரதி முச்சக்கர வண்டியையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

விபத்திற்குள்ளான யுவதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Latest Articles