குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டிருந்த யோசித, புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாக சொத்து குவித்த விவகாரம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.