ரசிகர்களை மிரட்டவுள்ள ‘மாஸ்டர்’!

’மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த விஜய், டைரக்டர் லோகேஷ் கனகராஜை கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்,’ ‘கைதி’ படங்களை பார்த்தபின், அவர் மீது விஜய்க்கு ஒரு மரியாதை ஏற்பட்டதாகவும், அப்போதே அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்த தாகவும் பேசப்படுகிறது. ‘மாஸ்டர்’ படத்தை பார்த்த பின், லோகேஷ் கனகராஜ் மீதான மரியாதை விஜய்க்கு மேலும் உயர்ந்து இருக்கிறதாம். “நாம் இருவரும் மேலும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியலாம்” என்று லோகேஷ் கனகராஜிடம் கூறியிருக்கிறார்.

‘மாஸ்டர்’ படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது. ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டது. ‘படத்தை எப்போது பார்ப்போம்?’ என்ற ஆவல், ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் இணையதளங்களில் வெளிவரயிருக்கும் நிலையில், விஜய் படமான ‘மாஸ்டர்’ தியேட்டர்களில் வெளியாகுமா அல்லது இணையதளங்களில் வெளிவருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles