ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை, திருச்சி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றதாக தெரிகிறது.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அந்தந்த மாவட்ட தனது மன்ற நிர்வாகிகளுடன் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

Latest Articles