தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் போட்ரி மைதானத்தில் வைத்தே இவர்கள் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி அயரபி மற்றும் போட்ரி தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே மைதானம் சுற்றிவளைக்கப்பட்டது. பொலிஸாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தம்பியோடியுள்ளனர். போட்டியை ஏற்பாடு செய்தவர்களும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
இதே வேளை கைது செய்யப்பட்டவர்கள் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கே. சுந்தரலிங்கம்
