முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவைக் கைது செய்யப் பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன.
ரணிலின் துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்ற விவகாரம் தொடர்பான விசாரணையில் சமன் ஏக்கநாயக்கவைக் கைது செய்ய சட்டமா அதிபரிடமிருந்து குற்றப் புலனாய்வுத்துறைக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றன.
அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் தமது வீட்டில் சமன் ஏக்கநாயக்க இருக்கவில்லை.
அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இன்றைய விசாரணைகளின் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.










