ரணில் ஆட்சி தொடர மலையக மக்கள் அங்கீகாரம்!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவை வழங்கி அவரை அமோக வெற்றிபெற வைப்பதற்கு மலையக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

மஸ்கெலியா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் இன்று தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சிய 350 ரூபாவை எந்த அடிப்படையில் கொடுப்பது என பின்னர் தீர்மானிக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கும் வாழ்வாதார கொடுப்பனவான அஸ்வெஸ்ம வழங்கப்பட்டிருக்கிறது. தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கிராமமாக்கும் முன்மொழிவு பல்வேறு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு பெருந்தோட்ட பிரதேச குடியிருப்பாளர்களின் உடமையாக்கப்படவிருக்கிறது.

கல்வித் துறையிலும் சுகாதார துறையிலும் எதிர்வரும் 5 ஆண்டுகளில் முன்னேற்றகரமான மாற்றங்களை காண முடியும் என எதிர்பார்க்கிறோம். பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளுக்கு 2500 உதவி ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கைக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றுள்ளதால் அது தற்காலிகமாக தடைப்பட்டிருக்கிறது. இதற்கான தடையை நீக்கி ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

நாடு மிகப்பெரும் பொருளாதார சூழ்நிலையில் சிக்கித் தவித்த போதும் மலையக மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு சரியான நிவாரணங்களை வழங்கிய ஜனாதிபதி ரணிலை நாம் மறந்து விட முடியாது.

அத்தியாவசிய அபிவிருத்திகளும், உணவு நிவாரணங்களும் மலையகத்துக்கு தடையின்றி கிடைத்தன, கிடைத்தும் வருகின்றன. இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தி காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாம் மீண்டும் ஜனாதிபதி ஆக்குவது நமது கடமையாகும்.

இந்த வரலாற்றுக் கடமையை எதிர் வரும் 21 ஆம் திகதி இந்த நாட்டு மக்களோடு சேர்ந்து மலையக மக்களும் நிறைவேற்றிக் காட்டுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles