ரணில், சஜித், அநுரவுக்கிடையில் விவாதம்: புதிய யோசனை முன்வைப்பு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா யோசனை முன்வைத்துள்ளார்.

இரு முனை விவாதமாக அல்லாமல் குறித்த விவாதம் மும்முனை விவாதமாக அமைந்தால்தான் அது பொருத்தமானதாக அமையும் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சஜித், அநுரவுக்கு இடையிலான விவாதம் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும், விவாதத்துக்கு இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை.

 

Related Articles

Latest Articles