பங்களாதேஷ் தற்போது ரணில் விக்ரமசிங்க போன்றதொரு தலைமையைத் தேடுவதாகவும், இலங்கைக்கு பங்களாதேஷ் போன்றதொரு மோசமான நிலை ஏற்படாதிருக்க ரணில் விக்ரமசிங்கவின் தலைசிறந்த தலைமைத்துவமே காரணம் என்றும் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ‘பெண்கள் எங்கள் சக்தி” என்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.