ரணில், ராஜபக்சக்களுடன் கூட்டணி கிடையாது – கம்மன்பில திட்டவட்டம்

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்சக்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிவிதுரு ஹெல உறுமய உட்பட உத்தர லங்கா சபாகய என்ற கூட்டணி எந்த தரப்புடன் கூட்டணி அமைக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாம் கூட்டணி அமைக்கும்போது தனிநபர்கள், எமக்கு வழங்கப்படும் பதவிகள் என்பன முதன்மை பெறாது. கோள்கைகளை முன்னிலைப்படுத்தியே கூட்டணி அமைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் கொள்கைகள்கூட ஆராயப்படும். எமக்கு நபர்கள் முக்கியம் அல்ல, கொள்கைகள்தான் முக்கியம்.

எனினும், ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களுடன் கூட்டணி அமைக்க தயாரில்லை. ஏனெனில் அவர்களின் நடவடிக்கை பற்றி எமக்கு தெரியும். சஜித், அநுர போன்றவர்கள் இன்னும் ஆளாவிட்டாலும் ரணில், ராஜபக்சக்கள் பல வருடங்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு நல்ல அனுபவம் உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles