ரயில் மார்க்கத்தில் மண்சரிவு – பதுளைக்கான ரயில் சேவை பாதிப்பு!

பதுளை ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பதுளைக்கான ரயில் சேவை தடைபட்டுள்ளது.

பதுளையில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண் மற்றும் கற்கள் ரயில் எஞ்சின் பகுதியில் விழுந்துள்ளன. இதனால் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனினும், பதுளைக்கான ரயில் சேவை தடைபட்டுள்ளது.

ரயில் மார்க்கத்தை சீர்செய்யும் பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles