ரஷியாவின் 60 சதவீத ஏவுகணைகள் தோல்வி

கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியும் ரஷியாவால் எந்த நகரத்தையும் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை.

உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்காக ரஷியா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷிய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போகிறது என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஏவுகணைகளின் 60 சதவீத தோல்வி விகிதத்தில் வெடிக்கத் தவறுவது மற்றும் இலக்கை தவறவிடுவது ஆகியவையும் அடங்கும்.

போர் தொடங்கியதில் இருந்து ரஷியா 1,100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது. ரஷிய ஏவுகணையின் தோல்வி விகிதம் நாளுக்கு நாள் மாறுபடும் என தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles