ரஷ்யா, உக்ரைன் மோதல் – இலங்கையில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும்?

” பிரச்சினைகளை பேச்சுமூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. பிரச்சினைக்கு போர் என்பது தீர்மாக அமையாது. உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் எந்தவொரு பக்கத்துக்காகவும் கதைக்கமுடியாது.” – என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரஷ்ய, உக்ரைன் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் என்ன நடக்கின்றது என நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அளவுக்கு எமது நாடு பொருளாதார மட்டத்தில் பலமடையவில்லை. அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடவே எதிர்ப்பார்க்கின்றோம். ரஷ்யா, மற்றும் உக்ரைனில் இருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள போர் சூழல் எமது நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பாரியளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் அதற்கு கூடுதல் விலையை கொடுக்க நேரிடும். தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் ஏற்படும்.

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எகிப்தில் உள்ள தூதரகம் தொடர்பிலேயே இருக்கின்றது. வெளியேறுமாறு நாம் முன்கூட்டிலே அறிவித்தோம். சிலர் வெளியேறி உள்ளனர். ஏனையோர் தொடர்பில் உள்ளனர். பெஸருசில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு பொறுப்பை அங்குள்ள பல்கலைக்கழகம் ஏற்றுள்ளது.

தூதரகங்கள் மற்றும் ஏனைய மூலங்களில் கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் நாம் ஆய்வுசெய்துவருகின்றோம். பேச்சு மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாம் கருதுகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் யுத்தம் தீர்வாகாது. இது விடயத்தில் எந்த பக்கத்துக்காகவும் எமக்கு கதைக்க முடியாது. சர்வதேச விவகாரங்களின்போது நிதானமாக செயற்பட வேண்டும்.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles