ரஷ்யா கோர தாக்குதல் – பற்றி எரிகிறது உக்ரைன்!

உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள பொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலகம் தீப்பற்றி எரிகிறது.

உக்ரைனுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை, உளவுத்துறை கட்டடங்கள் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா நேற்றே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles