ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு – சஜித் கோரிக்கை

நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, பி.பீ. ஜயசுந்தர, அஜித் நிவாட் கப்ரால், ஆடிகல, டபிள்யூ.டி. லக்‌ஷ்மன் உள்ளிட்டவர்களே பொருளாதாரத்தை வங்குரோத்தடைய வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு ஊடாகவும் இது உறுதியாகியுள்ளது.

எனவே, நாட்டை வங்குரோத்து அடைய வைத்த, அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நபர்களுக்கு இதற்கு மேலும் சிவில் உரிமைகளை வழங்குவது பொருத்தமல்ல என்று மக்கள் கருதுகின்றனர் .

இதற்கமைய மேற்கூறப்பட்ட நபர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான நடவடிக்கையை விசேட ஜனாதிபதி குழு ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதியால் மட்டுமே செய்ய முடியும். அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன். 220 லட்சம் மக்களின் சார்பில் இந்த கோரிக்கையை நாம் முன்வைக்கின்றோம்.

அத்துடன், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles