ராஜபக்சக்கள் சூறையாடிய நிதியை மீளப் பிடுங்குங்கள் – சந்திரிக்கா வலியுறுத்து

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமானோரைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார்.

நீதிமன்றம் அடையாளம் காட்டிய கும்பலினால் தவறாகக் கையாளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது அவர்களின் சட்டவிரோத சொத்துக்களை கைப்பற்றி இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்த அதனைப் பயன்படுத்துவதற்கு தற்போதைய அரசு உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பின்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களில் ஒரு சிலரை நீதிமன் றம் பெயரிட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்புடைய பலர் குற்றம் சாட்டப்பட
வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் நீதிமன்றத்தால் பெயரிடப்படவில்லை. இது, நாட்டின் வருங்காலத் தலைவர் களுக்கும் ஒரு கரும் புள்ளியாகும்.

மேலும், எதிர்காலச் சந்ததியினர் ஒரு தேசத்தை எவ்வாறு சரியாக ஆள்வது மற்றும் நாட்டின் பிரஜைகள் சுயலாபத் துக்கு அல்லாமல் தேசத்துக்காக
உழைத்து தலைவர்களாக உயர வேண்டும் என்பதை இதன் மூலம் படிப்பினை யாக உணர்ந்து கொள்ள வேண்டும்.”
– என்றார்.

Related Articles

Latest Articles