ராதா வகித்த கல்வி இராஜாங்க அமைச்சு அரவிந்தகுமாருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது அரவிந்தகுமாருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ்போட்டியிட்டு வெற்றிபெற்ற அரவிந்த குமார், பின்னர் ஆளுங்கட்சி பக்கம் தாவினார்.

அவர் அங்கம் வகித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் நல்லாட்சியின்போது கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles