நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு, அவரது சட்டத்தரணி மனுவொன்றின் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா தொற்றை காரணமாக கொண்டு, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என சுட்டிக்காட்டிய கொழும்பு மேலதிக நீதவான் லோச்சணி அபேவிக்ரம, பிணை மனுக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்கு சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார்.










