ரிஷாட்டின் வீட்டில் மலையக சிறுமிக்கு நடந்தது என்ன? 8 மாதங்களாக ஏன் வீட்டுக்கு வரவில்லை?

” 2020 ஒக்டோபர் மாதமே எனது தங்கை வேலைக்குச்சென்றுள்ளார். இன்றுவரை ஒருநாள்கூட அவர் வீட்டுக்கு வரவேயில்லை. அவரை சந்திக்கச் சென்றால்கூட அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.இந்நிலையில் திடீரென அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பொன்றுவந்துள்ளது.எங்கள் தங்கை வைத்தியசாலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  கடந்த 3 ஆம் திகதியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிகாயங்களுடன் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். உடலில் 71 சதவீதம் எரிந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். தங்கைக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. எங்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 வயது சிறுமியான இஷாலனியின் சகோதரர் ‘மலையககுருவி’யிடம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட டயகம பகுதியே இச்சிறுமியின் வாழ்விடம். 6 சகோதரர்களைக்கொண்ட குடும்பத்தில் இவர் மூன்றாவது பிள்ளையாக பிறந்துள்ளார். அப்பகுதியில் உள்ள தரகர் ஒருவர் ஊடாகவே கடந்த ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலைக்குச்சென்றுள்ளார்.

அதன்பின்னர் அவர் வீட்டுக்கே வரவில்லை. சம்பளம் மட்டுமே அனுப்பட்டுள்ளது. வீட்டார் சந்திக்கச்சென்றால்கூட புத்தளம் சென்றுவிட்டார் உட்பட பல விடயங்கள் கூறப்பட்டு அனுமதி மறுக்கப்படும் எனவும் சிறுமியின் சகோதரர் தெரிவித்தார்.

” தீக்காயம் ஏற்பட்டுள்ளது எனக்கூறப்பட்டாலும் அது எவ்வாறு ஏற்பட்டது என்பது எமக்கு தெரியப்படுத்தப்படவில்லை. மலையக சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடினேன். சில தகவல்களை கேட்டார்கள். அவற்றை திரட்டிய பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறையிடவுள்ளேன்.

எமது தங்கைக்கு நடந்த விடயம் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அம்மாவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, உண்மை தெரியப்படவேண்டும். ” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமி கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles