ரி – 20 போட்டி – நியூசிலாந்து, பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை!

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி நடைபெறும்.

ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க பங்களாதேஷ் அணி கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய  ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Articles

Latest Articles