ரொனால்டோவின் செயலால் கடுப்பில் கோலா நிறுவனம்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கொக்காகோலா நிறுவனத்துக்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேசை மீதிருந்த கோகோ-கோலா போத்தல்களை அகற்றிவிட்டு தண்ணீர் போத்தலை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ-கோலா போத்தல்களை அகற்றிவிட்டு தண்ணீர் போத்தலை வைத்தார்.

அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன் மேசைமீது கோலா போத்தல்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா போத்தல்களை எடுத்துவிட்டு, தண்ணீர் போத்தலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், சேவையில் வைக்கப்பட்டிருந்த கோலா போத்தல்களை அவர் அகற்றவில்லை. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும்.

Related Articles

Latest Articles