ரொஷானின் பதவி நீக்கம் அமைச்சர்களுக்கான சிவப்பு எச்சரிக்கை – சஜித் பகீர் தகவல்

என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆமாம் சாமி கூறி அமைச்சு பதவிகளை தக்கவைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் பதவி நீக்கப்படுவீர்கள் என்ற சிவப்பு எச்சரிக்கையையே ரொஷான் ரணசிங்க ஊடாக அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட சஜித் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான தீர்மானத்துக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். இந்த தீர்மானத்துக்கு முரணாக அமைச்சரவை பதவி நீக்கிவிட்டு, ஊழல் செய்த குழு பாதுகாக்கப்பட்டுள்ளது.

கொள்ளை இடம்பெற்றாலும் பரவாயில்லை, ஆனால் திருடர்களைப் பிடிக்க வேண்டாம் எனவும், ஆமாம் சாமி போட்டு பதவிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும், இல்லையேல் ரொஷான் ரணசிங்கவிற்கு நடந்தது போன்று நடக்கலாம் என்ற சிவப்பு எச்சரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தலைமையிலான அரசுக்கு விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் ஜனாதிபதி தவறான வழியில் செயற்பட்டார் , நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, இறுதியாக நாடாளுமன்ற அதிகாரத்தை கிடப்பில் போட்டுள்ளார் ,தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பைக்கூட அவர் புறக்கணித்துள்ளார்.

சீனி, மருந்து, கிரிக்கெட் போன்ற மாபியாக்களினால் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் கூட தீர்மானங்கள் எடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் ஆணை கிடைக்காத ஜனாதிபதியால், மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.” – என்றார் சஜித்.

Related Articles

Latest Articles