லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 4,115 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,652 ரூபா.
2.3 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு 23 ரூபாவினால் குறைக்கப்பட்டு 772 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
