“சிங்கபூரின் சிற்பி லீகுவான், சீனாவில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்திய டெங் ஷியாபிங் போன்றவர்களுக்கு இருந்த வலிமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கிளர்ச்சி, அத்துமீறல் என்பவற்றை மிகவும் சிறப்பான முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்தினார். நாடாளுமன்றத்துக்கு தாக்குதல் நடத்துவதற்கு தயாரானவேளையே அவர் இதனை செய்தார். அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை கொளுத்தி இருப்பார்கள்.
தற்போது யார் துள்ளியாலும் நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகை தாக்குதல் என்பவற்றை நடத்தி விரட்டப்படுகின்றனர். அந்த வலிமை இருக்க வேண்டும் . அந்த வலிமை லீகுவான், சீனாவின் டெங் ஷியாபிங் போன்றவர்களிடம் இருந்தது.
சீனாவில் பொருளாதார மறுசீரமைப்பை ஏற்படுத்தமுற்படுகையில் டெங் ஷியாபிங் இற்கு எதிராக 5 லட்சம் மாணவர்கள் வீதியில் இறங்கினர். அதனை கட்டுப்படுத்தினால் பொருளாதார மறுசீரமைப்பை அவர் மேற்கொண்டார். அதனால்தான் சீனா இன்று முன்னேறியுள்ளது. அமெரிக்காவுக்கு கடன் கொடுக்கும் நிலைமைக்கு வந்துள்ளது.” – என்றார்.