லுணுகலையில் குழு மோதல்: எழுவர் கைது!

லுணுகலை , ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் மூவர் காயமடைந்து மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 25, 35, 27, 32 மற்றும் 45 வயதுடைய ஜனதபுர மற்றும் மடோல்சிம, மெட்டிக்காத்தன்ன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகிக்கப்படும் இராணுவச் சிப்பாய் கிளிநொச்சி ஏழாவது காலாட்படை முகாமில் பணிபுரியும் சிப்பாய் எனவும் அவர் மோதலில் ஈடுபட்ட போது விடுமுறையில் இருந்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சந்திரசேகர தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபர்களை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மேலும் பொலிஸார் கூறினார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles