லுணுகலை பிரதேச செயலாளராக புவனேந்திரன் கடமையேற்பு!

லுணுகலை பிரதேச புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். புவனேந்திரன், பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று (14) பொறுப்பேற்றார்.

லுணுகலை பிரதேச செயலாளராக பதவியேற்பதற்கு முன்னர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், பசறை உதவி பிரதேச செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

கடமையேற்கும் நிகழ்வில் லுணுகலை பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் நிரோஷா ஹென்நாயக்க உள்ளிட்ட செயலக ஊழியர்கள் மற்றும் புதிய பிரதேச செயலாளர் புவனேந்திரனின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles