இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்த பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி சுதேவ ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தினார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைக்கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தை அடுத்து அவரைப் பதவி விலக்க வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
