வட்டவளை பகுதியில் ரயில் தடம் புரண்டத்தில் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டியவில் இருந்து இன்று பிற்பகல் 3.00 அளிவில் நானுஓயா நோக்கி பயணித்த சரக்கு ரயிலே, மேல் வட்டவளைக்கும் – ரொசல்லவுக்கும் இடையில் சுமார் 4.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில், ஹட்டன் புகையிரத நிலையம் வரையிலும் கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் நாவலப்பிட்டிய புகையிரத நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டு, பயணிகள், பொது போக்குரவத்து சேவையினூடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மலையக புகையிரத பாதையில் அண்மைக்காலமாக அடிக்கடி புகையிரதங்கள் தடம்புரள்வதனால் புகையிரத பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்