வரித்திணைக்கள அதிகாரிகள்போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளை போன்று செயற்பட்டு பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம – தர்கா நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தக நிலையங்களில் வருமான வரியை அறவிட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பிரதேச மக்களால் அளுத்கம பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளை போன்று நடித்து மக்களை ஏமாற்றும் மோசடிகள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருவதால் இது தொடர்பில் விளிப்புடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles