நுவரெலியா, வலப்பனை மா ஊவாவில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இரவு குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை ஒன்றரை பவுன் நகைகளும் 80 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு திங்கட்கிழமை (01) காலை வந்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது 80 ஆயிரம் ரூபா பணமும், ஒன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் இதன் மூலம் சேர்த்து வைத்த பணமே திருடப்பட்டுள்ளது எனவும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா இரசாய தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வலப்பனை பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.