வாக்குச்சீட்டை படமெடுக்க தடை!

வாக்களிப்பு நிலையத்தில் வாக்குசீட்டை படம் பிடித்தல், யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்.எம். ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.

“வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கீழ்வரும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கையடக்க தொலைபேசி பயன்படுத்த முடியாது.
படமெடுத்தல், வீடியோ செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் வைத்திருக்க முடியாது.

புகைப்பிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மது அருந்ததல் போன்ற நடவடிக்கைக்கும் தடை. மது அருந்துவிட்டு வாக்களிக்க வரக்கூடாது.

தான் வாக்களிக்கும்போது அந்த வாக்குச்சீட்டை வாக்காளர் படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ முடியாது. அதனை காட்சிப்படுத்தவும் கூடாது. வாக்களிப்பு நிலையத்துக்குள் தான் யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறமுடியாது.” – என்றார்.

Related Articles

Latest Articles