வாடகை வண்டி ஓட்டுனரின் மகள் படைத்த வரலாற்று சாதனை (காணொளி)

ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முதலாக பங்குபற்றத் தொடங்கிய 97 வருடங்களில் முதல் முதலாக பிலிப்பீன்ஸ் நாடு முதன் முதலாக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது.

பெண்களுக்கான 55 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கத்தை வென்ற பிலிப்பீன்ஸ் விமான்படை பெண் ஹிட்லின் டயஸ் இந்தப்பெருமையை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

கோவிட் பிரச்சினை காரணமாக மலேசியாவில் சிக்கிக்கொண்டு இவர், அங்கிருந்து நேரடியாக ஜப்பான் சென்று போட்டியில் கலந்துகொண்டு பெற்ற வெற்றியினால் பிலிப்பீன்ஸ் நாடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

வெற்றி பெற்ற தங்க மங்கைக்கு ஐந்து லட்சம் பவுண்ட்ஸ் பணத்தையும் வீடொன்றையும் அரசாங்கம் பரிசாக அறிவித்திருக்கிறத. இதைவிட, பிலிப்பீன்ஸ் நாட்டு வர்த்தகப்பெருங்குடி மக்கள் தங்க மங்கைக்கு பல்வேறு பரிசுகளை வரிசையாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிலப்பீன்ஸ் நாட்டின் விமானப்படையில் சேவைபுரியும் 30 வயதான ஹிட்லின் டயஸ், வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுபவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleஇலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை
Next articleடயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்