நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன், அன்றைய தினமே (25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) அதிகாலை 04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அவர் மேலும் கூறினார்.
இக்காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி எண் அடிப்படையில் வெளியேறவும் முடியாது. மருந்தகங்களை திறப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி காலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளியேறலாம். 11 மணிக்கு பின்னர் மீண்டும் பயணத்தடை அமுலுக்கு வரும்.
