‘விஜய் 65’ – தளபதியுடன் மீண்டும் இணைகிறார் யோகிபாபு

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 65’ படத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார்.

விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் யோகிபாபுவிடம் நீங்கள் “விஜய் 65” படத்தில் நடிக்கிறீர்களாக என்று கேள்வி எழுப்பினார். அதனைத்தொடர்ந்து தான் ’விஜய்’ 65 படத்தில் இருக்கிறேன் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

முன்னதாக ‘மெர்சல்’ ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் விஜயுடன் இணைந்து யோகிபாபு நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் விஜயுடன் இணைய இருக்கிறார்.

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதனை அவரது ரசிகர்கள் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகின்றனர்.

இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு அடுத்தப்படியாக நடிகர் விஜய் தமிழில் ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சியுடன் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleமேலுமொரு டொல்பினின் சடலம் கரையொதுங்கியது!
Next articleபாகிஸ்தானில் கோர ரயில் விபத்து – 30 பேர் பலி – 50 பேருக்கும் மேற்பட்டோர் காயம்