விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களால் இன்றைய தினம் பதுளையிலும் ஹாலிஎலயிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 3 நாட்களாக எரிபொருள் இன்மையால் பாரிய சிரமத்தின் மத்தியிலேயே பணியில் ஈடுபடுவதாகவும் தமக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி சீட்டுக்கு எரிபொருள் வழங்கப்படுவது இல்லை என்றும் எதிர்வரும் நாட்களில் மதிப்பீடு பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க அரசு தலையிட்டு போக்குவரத்து சிரமங்களை தீர்க்குமாறு கூறி பதுளை விசாகா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவும் ஹாலிஎல கொப்பேகடுவ மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் இன்றைய தின மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமு தனராஜா
