விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்- காஞ்சன விஜேசேகர

எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும் அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மின்சார சபைக்கு தேவையான எரிபொருளும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles