விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது!

விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் மூன்று பெண்களும், விடுதியின் உரிமையாளரான ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

46, 40 மற்றும் 21 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles