பலாங்கொடை – இரத்தினபுரி பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கலவான மிட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய அசங்;க நாமல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, இரத்தினபுரி பிரதான வீதியில் ஹொரகெட்டிய பிரதேசத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த இபோச பஸ்சுடன் மோதியுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் பயணித்தவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பலாங்கொடை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
எம்.எப்.எம்.அலி
