விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தமது அரசியல் ஆட்டத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
அன்றைய தினம் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தல், கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது முடிவு எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினல் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் முதல்வாரத்தில் புதிய கூட்டணி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு வழங்காவிட்டால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டார்.
