பெற்றோர் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மதுபோதையில் வரும் தந்தை தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளார்.
தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டின் போது தெரிவித்தார்.
