வெடுக்குநாறிமலை விவகாரம்: தமிழ் எம்.பிக்கள் சபைக்குள் போராட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் எம்.பிக்கள் சபைக்கு நடுவே வந்து, பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles