வெப்ப அலை: கலஹாவில் 11 மாணவர்கள் பாதிப்பு!

கடும் வெப்பத்தால் கண்டி – கலஹா, பகுதியிலுள்ள சகோதர மொழி பாடசாலையொன்றை சேர்ந்த 11 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெயிலுக்கு மத்தியில் இன்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையிலேயே வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாறப்பட்டனர்.

நாட்டில் ஜனவரி முதல் ஏப்ரல்மாதம்வரை கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. இக்காலப்பகுதியிலேயே பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. எனவே, விளையாட்டுப் போட்டிகளை பொருத்தமானதொரு காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles