வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் மாத்திரம் இது தொடர்பில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யபா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான மோசடிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles