இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதன்போது மனித உரிமை விவகாரம் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பிலும், ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
