வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலைய முனையம்! (காணொளி )

பிரித்தானியாவில் இந்த வாரம் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வேல்ஸ் மற்றும் வடமேற்கு பிரித்தானியாவில் கனமழைக்கான இரண்டு நாள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு பெரிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாட்டின் முக்கிய இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பிரித்தானிய மக்களுக்கனான அரிதாக அம்பர் வானிலை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது.

இரண்டு வாரங்களுக்கான மழை மொத்தமாக ஒரு மணி நேரத்தில் பெய்துள்ளதாகவும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles