வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) கையொப்பமிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மகாசங்கரத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கியதையடுத்து, ஏனைய மதத் தலைவர்களும் ஆசி வழங்கினர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles