இரத்தினபுரி, வேவல்வத்த தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (11) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேவல்வத்த தோட்டத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் குறித்த வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை வேவல்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எவ்.எம். அலி