” மக்கள் போராட்டங்கள் தொடரும் நிலையில், ராஜபக்சக்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டைவிட்டு தப்பியோடிவிடுவார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த ஆட்சி தேவையில்லை, ஆட்சியாளர்கள் கிராமங்களையும் அமைக்க வேண்டியதில்லை. கோத்தா கோ கிராமம், மைனா கோ கிராமம், கப்புடா கோ கிராமம் மலர்ந்துவிட்டன. இனி ஷிராந்தி கோ கிராமம், நாமல் கோ கிராமம் என்பனவும் உருவாகும்.
எனவே, இன்னும் ஓரிரு மாதங்களில் ராபக்சக்கள் நாட்டை விட்டு தப்பியோடிவிடுவார்கள். அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் நாம் கண்டுபிடிப்போம். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டுவருவோம். தவறிழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.” – என்றார்.